9487 கிராமியப் போஷாக்கு (1).

ஆர்.எஸ். வானகுரு (தொகுப்பாசிரியர்). கொழும்பு: போஷாக்கு ஜனசக்திப் பிரிவு, கொள்கைத் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு, 1வது பதிப்பு, டிசம்பர் 1990. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத் தாபனம்).

iii, 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,  அளவு: 27×21 சமீ.

போஷாக்கு ஜனசக்திப் பிரிவுப் பணிப்பாளரான நூலாசிரியர் இலங்கையில், போஷாக்குக் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான கைநூல் தொடரில் முதலாவதாக வெளியிட்டுள்ள நூல் இது. பிரசாத் குமார் உதயரத்னவின் விளக்கப்படங்களுடன் வெளிவந்துள்ள இந்நூலுக்கான நிதியுதவியை நோறாட் (NORAD) நிறுவனம் வழங்கியுள்ளது. இந்நூலில் போஷாக்குப் பிரச்சினை (R.K.M. ரத்நாயக்க), கர்ப்பிணித் தாயின் போஷாக்கு (நாரத வர்ணசூரிய),  தாய்ப்பால் அத்தியாவசியமானது (C.C.De சில்வா), தாய்ப்பாலுடன் பொருத்தமான மேலதிக உணவு வழங்கல் (பிரியாணி சொய்சா), உங்கள் குழந்தைகளுக்குச் சமநிறை உணவு (எஸ்.வாமதேவன், பீ.சோமலிங்கம்), போஷாக்கைப் பரிசோதித்தல் (எஸ்.ஏ.வீரசிங்க), நோய்த் தடுப்பு சக்தி ஏற்றுதல் (மாலனி த சில்வா), வயிற்றோட்டமும் வாய்மூலம் மீள நீரளித்தலும் (ஹிரந்தி விஜயமான்ன), புழுக்களால் ஏற்படும் நோய்களும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் (நாரத வர்ணசூரிய), சுற்றாடல் சுகாதாரமும் போஷாக்கும் (நிமல் ஹெட்டி ஆராச்சி), பிள்ளைகள் பெறுவதற்கான கால இடைவெளி (ஹிரந்தி விஜயமான்ன), குறைந்த செலவில் நிறைந்த போஷாக்குப் பானம் (வில்லியம் அல்விஸ்) ஆகிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 90491).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Online Multiplayer Black-jack Game

Content From the Blackjack 100 percent free Black-jack Game Which On the web Blackjacks Website Stands out To possess British Fans? Casinoin Mistake #8: Counting