9507 நவீன கணக்கீட்டுக் கோட்பாடுகளும் மீளமைக்கப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களும்.

க.யோகராஜா, கு.கலைச்செல்வன். கொழும்பு 6: பிரில்லியன்ட் பப்ளிக்கேஷன்ஸ், இல.49, பெர்ணாண்டோ வீதி, வெள்ளவத்தை, 8வது பதிப்பு, ஒக்டோபர் 2011, 1வது பதிப்பு, மே 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

v, 225 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-50848-9-5.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் மறுசீரமைக்கப்பட்ட கணக்கீட்டு நியமங்களை அடிப்படையாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. இலகு மொழி நடையில் அமைந்த வசனங்கள், நடைமுறை  உதாரண விளக்கங்கள், உடனடி அறிவுத்தேடலை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவியாக சிறிய கணக்கீட்டு அகராதி என்பன இந்நூலின் சிறப்பம்சங்களாகும். க.பொ.த. உயர்தர கணக்கீட்டுப் பாடத்திட்டத்திற்கு அமைவாகவும், பல்கலைக்கழக, தொழில்நுட்ப, தொழில்சார் கணக்கியல் பரீட்சைகளுக்குத் தயாராகும் மாணவர்களின் தேவையைக் கருத்திற்கொண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. சொல்லகராதி, கணக்கீட்டு எண்ணக்கருக்கள், கணக்கீட்டு நியமத்திற்கோர் அறிமுகம்,  வேலைச் சட்டகம், நிதிக்கூற்றுகளைத் தயாரித்து வழங்கல் (இலங்கைக் கணக்கீட்டு நியமம் 01), இருப்புக்கள் (இ. க. நி. 02), காசுப்பாய்ச்சல் கூற்று (இ. க. நி. 07),  கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வழக்குகள் (இ. க. நி. 08), அறிக்கையிடும் காலப்பகுதிக்குப் பின்னரான நிகழ்வுகள் (இ. க. நி. 10), ஆதனம், பொறி, மற்றும் உபகரணங்கள் (இ. க. நி. 16), குத்தகைக் கணக்கீடு (இ. க. நி. 17), வருமானம் (இ. க. நி. 18), ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புகள், மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள் (இ. க. நி. 37), அருவகச் சொத்துக்கள் (இ. க. நி. 38) ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  229280). 

ஏனைய பதிவுகள்

13495 நீரிழிவை வெற்றிகொள்வோம்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: யாழ். நீரிழிவு அசோசியேஷன், இல 39, சோமசுந்தரம் அவென்யூ, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). (4), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,