9519 திரையும் அரங்கும்: கலைவெளியில் ஒரு பயணம்.

அ.யேசுராசா. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணை வெளியீடு, லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர்; 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்).

260 பக்கம், விலை: இந்திய ரூபா 225., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-93-82033-31-8.

திரைப்பட, நாடகத்துறை, கலைப்பதிவுகளைக் கொண்ட அ.யேசுராசாவின் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. சிறுகதை, கவிதை, இலக்கிய, திரைப்பட, நாடக விமர்சனம், பத்தி எழுத்து, மொழிபெயர்ப்பு, இதழியல், தொகுப்பு முயற்சி எனப் பல்துறைகளிலும் கவனத்திற்குரிய ஆளுமையாகத் திகழ்பவர்  அ.யேசுராசா. கலைத்துவமற்ற பிரச்சாரப் படைப்புகள்,  பெரிதும் போற்றப்பட்ட எழுபதுகளில், கலைத்துவத்துக்கும் நவீன போக்குகளுக்கும் அழுத்தம் கொடுத்த ஈழத்துச் சிறுசஞ்சிகை வரலாற்றில் தவிர்க்கப்பட முடியாத  ‘அலை-சஞ்சிகை’யை வெளிக்கொண்டு வந்ததில் இவரது பங்களிப்பு உயர்வானது. கவிதை, தெரிதல் ஆகிய இரு சிறுசஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான திசை வார இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றியவர். இதுவரை ஆறு நூல்களை வெளியிட்டுள்ள இவர், நான்கு இலக்கியத் தொகுப்புக்களின் உருவாக்கத்திலும் பங்கேற்றவர். 

ஏனைய பதிவுகள்

Tragaperras Big Bass Bonanza Megaways

Posts Sites Where you could Gamble Bonanza Megaways Acceptance Offer 100percent To 500, 200 Totally free Revolves Candyways Bonanza Megaways Slot Review Final thoughts Practical