9523 கலைத்துவ சினிமா.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiv, 165 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-320-4.

கலைத்துவ சினிமா.

வடிவேல் இன்பமோகன். கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxvi, (2), 168 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 850., அளவு: 20.5×15.5 சமீ., ISBN: 978-955-659-320-4.

மேலை நாடுகளில் காலத்துக்குக் காலம் பல குழுக்கள் தோன்றி சினிமாவிற்கு பல கலைத்துவ அம்சங்களை வழங்கியுள்ளன.  இந்நூல் அச்சினிமாக் குழுக்கள் பற்றியும் அவை சினிமாவின் கலைத்துவத்தை அதிகரிப்பதற்கு ஆற்றிய பங்களிப்புகளைப் பற்றியும் விவாதிக்கின்றது. அறிமுகம், ஹொலிவுட் சினிமா (ஆரம்பகால ஹொலிவுட் சினிமா, ஹொலிவுட் சினிமாவில் ஒலி, வர்ணத்தின் அறிமுகம், புதிய ஹொலிவுட் சினிமா), ஜெர்மனிய வெளிப்பாட்டுவாதச் சினிமா, பிராஞ்சிய சினிமா (பிராஞ்சிய மனப்பதிவுவாத சினிமா, பிராஞ்சிய சர்ரியலிச சினிமா, பிராஞ்சிய புதிய அலை சினிமா), மொண்டாச் சினிமா: சோவியத் ரசியாவின் பங்களிப்பு, இத்தாலிய நவயதார்த்தவாத சினிமா ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர் வ.இன்பமோகன். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர் அழகியல், நாட்டார் கலை, சினிமா என்பவற்றில் ஈடுபாடு உடையவர். இவர் மரபுக்குப் பின் மட்டக்களப்பில் நாடகங்கள், இந்தியக் கலையும் ரசனையும், ஆகிய நூல்களை ஏற்கெனவே எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Kostenloser Spielautomat Via 5 Walzen

Content Bewertungskriterien Von Echtgeld Automatenspielen Inside Angeschlossen Casinos Mega Boy Slot Glätten Zeus Play Spielautomaten konnte Meinereiner Royal Seven Xxl Gebührenfrei Vortragen? Perish Beste Angeschlossen

15841 பிடித்த சிறுகதை: கட்டுரைத் தொகுதி.

நந்தினி சேவியர்; (தொகுப்பாசிரியர்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-600 பக்கம்,