9567 இன்றைய வண்ணத்துப் பூச்சிகள்.

கெக்கிராவ ஸஹானா. சென்னை 600012: மாங்குயில்  பதிப்பகம், 142, சச்சிதானந்தம் தெரு, கொசப்பேட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை 600018: மாஸ் டைப்போகிராபிக்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.

சுய அனுபவப்பிழிவாக வெளிவந்துள்ள இக்கவிதைத் தொகுப்பின் வாயிலாக ஸஹானா ஈழத்து முஸ்லிம் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராக இனம்காணப்படுகிறார். தன் சூழலினூடாக பெண்ணினம் சந்திக்கும் பிரச்சினைகளின் உணர்வு வெளிப்பாடாக, ஆதங்கமாக இவரது கவிதைகள் அமைகின்றன. ஆணாதிக்கம் கட்டவிழ்த்துவிடும் வக்கிரங்கள் இவரத கவிதைகளில் இனம்காணப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 236554).

ஏனைய பதிவுகள்

Wagering Roundup

Blogs Rushing Terms You should know Ufc Betting Info And strategies Does Texas hold em Provide Greatest Profitable Options? Bonus Revolves Texas Gambling Tax Calculator

9572 உன் ஓரவிழி வீச்சிலிருந்து.

என்.சுந்தா. மன்னார்: என்.சுந்தரராஜன், 1வது பதிப்பு, மார்ச் 2010. (மன்னார்: ஸ்கை பிரின்டர்ஸ், புனித செபஸ்தியார் வீதி). xix, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 320., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-97603-2-0.

16499 எனக்கென்றிருந்த இடங்களில் (கவிதைத் தொகுதி).

துரைச்செல்வி. சென்னை 600 024: காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை 600 005: மணி ஆப்செட்). xiv, 98 பக்கம், விலை: இந்திய