9569 உப்புக் கரிக்கும் உதடுகள்.

இ.சிவதர்சினி. யாழ்ப்பாணம்: இ.சிவதர்சினி, குப்பிளான் தெற்கு, குப்பிளான், 1வது பதிப்பு, ஆவணி 2005. (யாழ்ப்பாணம்: லலிதா கிராப்பிக்ஸ், அங்களப்பாய், இணுவில் கிழக்கு).

xxii, 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.

இது ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுப்பு. தீக்குளித்துக்கொண்டிருக்கும் தனது தேசத்தின் சமகால நிகழ்வுகளும் பெண்ணியச் சிந்தனைகளும் தன்னைப் பாதித்த இன்னோரன்ன பல நிகழ்வுகளுமே தன் கவிதைகளின் மூலப்பொருள் என்கிறார் சிவதர்சினி. சமாதானம், வேலை நிறுத்தம், கலாச்சாரச் சீரழிவு, சீதனக் கொடுமை, பாதிப்புற்றோர் நட்பு என்பனவாக இவரது கவிதைக் கருக்கள் விரிந்து செல்கின்றன. மொத்தம் 52 கவிதைகள் இத்தொகுப்பில் இடமடபெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  156149). 

ஏனைய பதிவுகள்

17779 துரியோதனன் துயரம்: மஹாபாரதம் ஓர் அரசுரிமைப் போர்.

சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 452 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 22×15