9605 சுட்டுவிரல் (கவிதைத் தொகுதி).

வடமராட்சி கலை இலக்கிய சுவைஞர் சங்கமம். பருத்தித்துறை: வடமராட்சி கலை இலக்கிய சுவைஞர் சங்கமம், 1வது பதிப்பு, 2001. (பருத்தித்துறை: தமிழ்ப் பூங்கா அச்சகம்).

(4), 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

வடமராட்சி கலை இலக்கிய சுவைஞர் சங்கமத்திலே அங்கத்தவர்களாக இருக்கும் சில இளைய கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வழங்கும் முயற்சி இதுவாகும். தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் மாவட்டரீதியில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்ற தென் பொலிகை குமாரதீபனின் அறுவடை காலத்து மழை என்ற கவிதை முதலாவதாக இடம்பெறுகின்றது. தொடர்ந்து, நிலவிழி நீரை நிதந்தூவுகின்றோம், என்று வரும் விடிவு, போர்வைக்குள் வாழ்வு, வாழ்வு இனித்திடுமோ?எறிகணை, உயிர்வலைகள் அகலவில்லை, தமிழ் இனம், குதறப்பட்ட தேசமதில், சரியான தவறு, அதிசயம், ஒளி மறைந்து போனது, விருப்பத்தின் கர்ப்பம் ஆகிய 13 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  133156). 

ஏனைய பதிவுகள்

Juguetear Montezuma Regalado My Blog

Content Giros sin cargo en casinos nuevos Mx Win Casino Bono Desprovisto Depósito cincuenta Giros Sin cargo 2024 Estrategias sobre paga sobre Vulkan Vegas casino