சுதந்திரன். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், இல. 9-6-18/2, ஒட்டாரி தெரு, வத்தலகுண்டு 642202, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (சென்னை: கிரேஸ் கிராப்பிக்ஸ்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 45., அளவு: 20.5×13.5 சமீ.
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் சுதந்திரன், சுடர், சுதந்திரன் ஆகிய இதழ்களில் எழுதிய 31 மரபுக் கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். தமிழ் மண்ணையும் தமிழரையும் நேசித்த ஒரு கவிஞனின் குரலாக இது வெளிவந்துள்ளது. நெஞ்சில் குமைந்துகொண்டிருக்கும் வேதனைகளையும் குமுறல்களையும் அழகிய கவிதைகளாக வடித்துள்ளார். போர்க்காலத் தாக்கங்கள் பற்றிய உணர்வின் வெளிப்பாடு சில கவிதைகளில் காணப்படுகின்றன. இவரது கவிதைகள் கனலைக் கக்குவதுடன் அறிவுரைகளும் ஊக்க மாத்திரைகளும் சில கவிதைகளில் ஊடுருவியுள்ளன.