ஜீவா நாவுக்கரசன். (இயற்பெயர்: சி.கந்தசாமி). யாழ்ப்பாணம்: பாக்கியம் கந்தசாமி, நவாலி, மானிப்பாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991. (சென்னை 600024: ஏ.ஆர்.பிரிண்ட்ஸ், 375-8, ஆற்காடு சாலை).
120 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 18×12.5 சமீ.
ஜீவா நாவுக்கரசன் என்ற பெயரில் கலை இலக்கிய உலகில் அறியப்பெற்ற அமரர் சி.கந்தசாமி அவர்களின் மறைவின் ஓராண்டு நிறைவின் நினைவுக்காக வெளியிடப்பட்ட அவரது தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு. பல்வேறு பொருள்குறித்து அவ்வப்போது இவர் தீட்டிய கவி மலர்கள் இவை. இலக்கியம், சமயம், சமுதாய சீர்திருத்தம், அரசியல், மக்கள் சேவை போன்ற கருப்பொருள்களில் இக்கவிதைகள் அமைகின்றன. அமரர் கந்தசாமி கவிதைகளுடன் பொருள்பொதிந்த பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீன உதயதாரகை வார இதழிலும்பிற வார ஏடுகளிலும் வெளியாகியுள்ளன. சிறந்த பேச்சாளரும் நடிகருமான இவரும் இவரது துணைவியாரும் பல வானொலி நாடகங்களில் பங்கேற்றிருக்கின்றனர். நல்லதோர் வீணை, கவரிமான் ஆகியன குறிப்பிடத்தக்க சில மேடை நாடகங்களாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87998).