9625 நெஞ்சின் நெருடல்கள்.

சி.பற்குணம். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏஷியன் புக்ஸ், 6, தாயார் சாஹிப் இரண்டாவது சந்து, 1வது பதிப்பு, ஜனவரி 1997. (சென்னை 600005: R.K.L.Printers).

72 பக்கம், விலை: இந்திய ரூபா 20., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9476-00-9.

இலக்கியவாதியும் வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவுத் திணைக்களப் பணிப்பாளருமான அமரர் சி.பற்குணத்தின் கவிதைகள் இவை. அவர் 1.4.1996இல் அமரத்துவமடைந்த பின்னர் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் துதி, விண்பா விண்ணப்பம், ஒளிவளர் விளக்கே, கந்தனுக்கு வாழ்த்து, மமதையில் உவகை போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. மனிதநேயமற்ற கொடுமைகளினால்- பொருளாதார, ஏற்றத் தாழ்வுகளினால்- சாதி வேறுபாடுகளினால்- சமூக, அரசியல் போராட்டங்களினால் மக்கள் அனுபவித்த துன்பங்களை நேரடியாகக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் இளம்பிராயத்தில் கலந்துகொண்டவர். இத்தகைய அனுபவப் பின்னணியே இவரது கவிதைகளுக்குப் பகைப்புலமாக அமைகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 122505).

ஏனைய பதிவுகள்

11953 உரிமைக்கும் உயர்வுக்கும்: பாராளுமன்ற உரைகள் 2010-2011.

முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை) xi, 172 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: