9642 வெண்பனிச் சுவடுகள்: கவிதைத் தொகுதி.

நவீனன் (இயற்பெயர்: வி.ஐங்கரன்). ரஷ்யா: வைகறை வெளியீட்டகம், தபால் பெட்டி எண் 45, Smolensk, 214019, 1வது பதிப்பு, மார்கழி 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

100 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ.

சார்ள்ஸ் என்ற புனைபெயரில் தன் பள்ளிக்காலம் முதல் கவிதைத்தளத்தில் பயணித்துவரும் ஐங்கரன், நவீனன் என்ற புனைபெயரிலும் கவிதைகள் எழுதிவருபவர். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அங்கு கல்விகற்ற வேளையில் தொடங்கி அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னமும் இருட்டினிலே, உறக்கம் தேடும் உலகிற்காய் போன்ற கவிதைத் தொகுதிகளை வழங்கியவர். தற்போது அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் மருத்துவத்துறையில் பணியாற்றுகின்றார். இத்தொகுதியில் ஒரு காலை ஒரு மடல் விரிப்பு, வெண்பனிச் சுவடுகள், மௌனித்த மாஸ்கோவின் தெருக்கள், விலங்குகளை முறித்தெழுந்த மாந்தர்களாய், விலைபோகும் வீரத்தின் விளைநிலமே, உள்மன யாத்திரை, விழித்துக்கொள்ளும் அவள் முகம், கேள்விக்குறியல்ல முற்றுப்புள்ளியே, மனவிதைப்பு, மானிட எச்சத்தின் மரணிப்பில் எவருக்குச் சுதந்திரம், நிகழ்கால வேண்டுதல், உயிர்த்தெழுவீர் உரிமை மீட்கவே, மலரிடை வெளியும் மனமும், யுகப்பிரவேசம், விடியாத விடியல்கள், இதய முகாரி, விழுதுகளுக்கு விதையுண்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 17 புதுக்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

ஏனைய பதிவுகள்

12578 – ஆரம்ப விஞ்ஞானம்: ஆண்டு 5.

கு.வி. அச்சகத்தினர். யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கு.வி.அச்சகம், 58, கிறீன் லேன்). (4) 108 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 80., அளவு: 26.5×20 சமீ. 1997ஆம் ஆண்டு

17558 நிலவுக்குள் தீ.

நிந்தகத்து  பாரிஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). xvi, 68 பக்கம், விலை: