9660 அனுராதா கதைகள்: சிறுகதைத் தொகுப்பு.

அனுராதா பாக்கியராஜா. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு 11: எஸ்.என்.எம்.ஆர். கிராப்பிக்ஸ் ).

x, 92 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0195-13-8.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியை வதிவிடமாகக் கொண்டவர் அனுராதா. 1968இல் எழுத்துத்துறைக்குள் நுழைந்தவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தெரிவுசெய்யப்பட்ட  நிலையக் கலைஞராக இருப்பவர். வாய்ச்சொல் வீரர்கள், என்று தணியும் இந்தத் தாகம், தாய் மனம், தியாக தீபம், தருமம் தலைகாக்கும், வெளிநாட்டு மாப்பிள்ளை, கண் திறந்தது, பூர்வஜென்ம பந்தமோ, அவஸ்தைப்படும் அப்பாவிகள், ஜெயந்தி, கனவுகள் கலைந்தபோது ஆகிய 11 கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவரது ஆரம்ப காலப் படைப்புக்கள்; எஸ்.அனுராதா எனவும் , திருமணத்தின் பின் அனுராதா பாக்கியராஜா என்ற பெயரிலும் இலக்கிய உலகை அலங்கரித்துள்ளன. இலங்கை வானொலி இவரது எழுத்தாற்றலுக்கு விளைநிலமாகியுள்ளது. புரவலர் புத்தகப் பூங்காவின் 34ஆவது நூலாக இது வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Soul Mountain Gambling enterprise

Articles Best mini baccarat | Bc Online game Income tax For the Overseas Gambling enterprise Profits Create A back ground And you will Defense View

Ask yourself Lady Casino slot games

Articles The advantages of To play Totally free Las vegas Ports Headings – play basketball star slot machine In which Should i Gamble Slotomanias Totally

10568 தழலாடி வீதி: விரல் வழி ஒழுகிய தீத்துளிகள்.

கந்தையா கணேஷமூர்த்தி. அட்டாளைச்சேனை: கலை கலாசார மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்). xxviii, 200 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18×12.5 சமீ.,