9668 ஈழத்துச் சிறுகதைகள்.

சிற்பி (இயற்பெயர்: சி.சரவணபவன்) (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, 1வது பதிப்பு, 1958. (சென்னை: மாருதி அச்சகம், 83, பீட்டர்ஸ் ரோடு, இராயப்பேட்டை).

162 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.

கடற்கரைக் கிளிஞ்சல்கள் (இலங்கையர்கோன்,ஈழகேசரி-1954), வெள்ளம் (இராஜ அரியரத்தினம், ஈழகேசரி-1944) மனிதன் (க.தி.சம்பந்தன், கலைமகள்-1950), குருவின் சதி (தாழையடி சபாரத்தினம்,ஆனந்தன்-1954), அவன் (க.இராஜநாயகன், மறுமலர்ச்சி-1948), ஒரு பிடி சோறு (கனகசெந்திநாதன்,ஈழகேசரி-1945), பிள்ளையார் கொடுத்தார் (வரதர், ஆனந்தன்-1953), தோணி (வ.அ.இராசரத்தினம்,ஈழகேசரி-1954), வாழ்வு உயர்ந்தது (சகிதேவி தியாகராஜா,சுதந்திரன்-1955), கங்காகீதம் (சி.வைத்தியலிங்கம்,கிராம ஊழியன்-ஆண்டு?), உப்பிட்டவரை (கே.டானியல்,சுதந்திரன்-1954), பதவி துறந்தார் (செ.கணேசலிங்கன்-புதிய கதை) ஆகிய 12 சிறுகதைகளின்; தொகுப்பு. ஈழத்தின் படைப்பாளிகளின் கதைகளை மாத்திரம் உள்ளடக்கி வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாக இது ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. நூலின் இறுதியில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளும் தொகுப்பாசிரியரால் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18412).

ஏனைய பதிவுகள்

Промокоды «Мелбет» 2025 на данный момент: особые премия коды букмекера возьмите фрибеты, как их приобрести а еще вывести

Content Камо вводить промокод Мелбет Кэшбэк во Мелбет в видах постоянных клиентов Застрахование ставки возьмите необходимую сумму вплоть до 10000₽ Нарушение этого адденда может привести

ᐈ Play Enchanted Meadow Slot

Blogs Are The brand new totally free Gamble Mode Cellular Movies Ports How do i Score Totally free Spins To your Enchanted Meadow? An additional