9669 உளநெறிக் கதைகள்.

சபா.ஜெயராஜா. மருதனார்மடம்: அம்மா வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, 1997. (இணுவில் : அம்மா அச்சகம்).

iv, 86 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 18.5×12.5 சமீ.

செவ்வந்தி ஏமாற்றம், இரண்டு அணில்கள், முரண் சுருதிகள், அவனும் பாவையும், இழந்த இலுப்பை மரநிழல், மண்பாவை, சிறுவனின் ஓவியம், காற்றும் பனை ஓலையும், பசுக்கன்றும் மனிதனும், மாடுமலைத்தோட்டம், வண்டூர் அனுபவம், ஆசிரியர் நந்தவனம் ஆகிய 12 கதைகளை இந்நூல் கொண்டுள்ளது. ஒருவர் தம்மைத்தாமே நெறிகை செய்து, மனக்கோல உராய்வுகளை இனங்கண்டு உளச்சுகம் தேடும் உபாயங்களுள் ஒன்றாக உளநெறிக் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறுகதை நுட்பங்களும் உளவியல் நுட்பங்களும் ஒன்றுகலந்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய வடிவமாக இக்கதைகள் அமைகின்றன. கதைகளின் நிறைவில் ஒருவரது உள்ளத்தைக் கிளறவும், மனவெழுச்சி சார்ந்த உளச்சமநிலைகளை உருவாக்கவும், தாக்கங்களைச் சுமந்து அறிகைக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் வல்ல வினாக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுக்குரிய விடைகளைத் தேட முற்படுதல் உள்ளத்தை நெறிப்படுத்தும் அறிகைச் செயல்முறையைப் பலப்படுத்தும்.  இவற்றுக்குரிய சரியான விடைகள் ஒவ்வொருவரதும் உள இயல்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். இக்கதைகள் பரிசோதனை முயற்சியாக வீரகேசரி வார இதழில் முன்னர் வெளிவந்தன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118924).

ஏனைய பதிவுகள்

15435 ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து கதைகள்: தொகுதி 2.

திருமதி அ.மயில்வாகனம். யாழ்ப்பாணம்: திருமதி அ.மயில்வாகனம், முன்னாள் அதிபர், இராமநாதன் மகளிர் பயிற்சிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஈழநாடு லிமிட்டெட்,  சிவன் கோவில் மேலை வீதி). (4), 110

Content Как Играть В Авиатор Бесплатно Как Обойти Блокировку «пин Ап» Когда Вышел Слот Aviator? Как Играть В Игру Aviator На Деньги? Как Зарегистрироваться В