9683 சங்கமம்: சிறுகதைத் தொகுதி.

செ.கணேசலிங்கன். சென்னை: பாரி நிலையம், 59 பிராட்வே, 1வது பதிப்பு, டிசம்பர் 1961. (சென்னை 14: மாருதி பிரஸ், 83, பீட்டர்ஸ் ரோடு).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18.5×13 சமீ.

நல்லவன், ஒரே இனம் ஆகிய முதலிரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்ட செ.கணேசலிங்கனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும். இதில் சங்கமம், கவலை இல்லாதவன், பெண், வெறித்த பார்வை, புயல், போராட்டம், மேற்கு வேலி, வியாபாரம், உயிர், பொழுதுபோக்கு, மரணத்தின் அணைப்பில், கற்பு எங்கே, காணிக்கை ஆகிய 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40964).

ஏனைய பதிவுகள்