9702 பிறைப் பூக்கள்.

அ.ஸ.அப்துஸ்ஸமது  (தொகுப்பாசிரியர்). பாணந்துறை: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம், ஹேனமுல்லை, 1வது பதிப்பு, மே 1979. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

185 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5×14 சமீ.

நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மகா நாடு இலங்கையில் மூன்றுநாள் விழாவாக 1979, ஜுன் 29, 30 மற்றும் ஜுலை 1ம் திகதிகளில்  நடைபெற்ற வேளையில் ஈழத்து முஸ்லிம் சிறுகதை மலராக இந்நூல் ஈழத்து முஸ்லிம் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஈழத்து இஸ்லாமிய சிறுகதைகளை கொத்தன் வி.எம்.இஸ்மாயில், அ.ஸ.அப்துஸ்ஸமது , ஜுனைதா ஷெரீப், எம்.ஐ.எம். தாஹிர், எம்.பி.எம். நிஸ்வான், எஸ்.எல்.எம். ஹனிபா, வை. அஹமத், எஸ். முத்துமீரான், நாவல்நகர் ப.ஆப்தீன், கொழும்பு எம். ஏ. றஹீமா, திக்குவல்லை கமால், கலைவாதி கலீல், எம்.ஐ.எம். முஸம்மில், மருதூர் அலிக்கான், எம்.எச்.எம்.அஷ்றஃப், நயீமா சித்தீக், எம்.எச்.எம்.ஷம்ஸ், மருதூர்கனி, எம்.ஏ.எம்.ஏ. வாஹித், வேதாந்தி, அக்கரையூரன், மொயின் சமீன், மருதூர் ஏ.மஜீத், நீள்கரை நம்பி, மருதூர் வாணன், எம்.எல்.எம்.மன்சூர், மாத்தறை ஹஸீனா வஹாப் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  20538). 

ஏனைய பதிவுகள்

Acquisto di pillole di Cozaar

Cozaar 50 mg 50 mg Ogni giorno hanno effetti collaterali indesiderati? Cosa devo dire al mio medico se prendo il Losartan? A cosa serve la

15978 சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்(இந்திய வம்சாவளியினர்).

மு.சி.கந்தையா. கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2015, 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை 1: மாணவர் நகலகம்). 240 பக்கம்,