9704 மண்ணின் முனகல்: சிறுகதைகள்.

கே.ஆர்.டேவிட். கொழும்பு 13: கு.வி.அச்சக வெளியீடு, 58, கிறின் லேன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கொழும்பு 13: கு.வி.அச்சகம்).

xii, 132 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் ஒரு நம்பிக்கையுடன் பல தளங்களில் இயங்கி வருபவர் கே.ஆர்.டேவிட். அறுபதுகளிலேயே சிறுகதை உலகில் பரிச்சயமான இவரது பெயர் பூண்டுலோயாத் தோட்டமொன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த  வரலாறு அவளைத் தோற்று விட்டது என்ற நாவல் வெளிவந்ததன் பின்னர் மிகவும் பிரபல்யமானது. மண்ணின் முனகல் என்ற இந்நூலில் இவரது தேர்ந்த சிறுகதைகளான ஊர்வலம் செல்கிறது, கஸ்தூரி, இதயங்கள் கரைகின்றன, அதிர்வு, பாண் போறணை, உணர்வுகள் கட்டுடைத்தால், மிசின் பெட்டி, நாய் மூளை, சிறைக்கதவுகள் திறந்து கிடக்கின்றன, கண்ணீர் கொந்தளிக்கும், மண்ணின் முனகல், நான் கேவலமானவன் அல்ல ஆகிய பன்னிரு கதைகள்; இடம்பெற்றுள்ளன. அடிமட்ட மக்களின் வாழ்வியலில் உள்ள துயரங்கள் இவரது மனிதத்தைக் குத்த அந்தத் துடிப்புகளின் படிமங்களாக இவரது கலைப்படைப்புக்கள் உருவம் பெற்றிருக்கின்றன.

ஏனைய பதிவுகள்

15018 நூல்தேட்டம் தொகுதி 15.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,