9707 முடிவில் தொடங்கும் கதைகள்.

கெக்கிறாவ ஸஹானா. (இயற்பெயர்: ஏ.எஸ்.ஜஹனாறா). கெக்கிறாவ : ஏ.எஸ்.ஜஹனாறா (கெக்கிறாவ ஸஹானா) , 32/21 செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன் வீதி).

ix, 89 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-51679-5-6.

விஞ்ஞான, ஆங்கில, தமிழ்மொழி ஆசிரியையாகப் பணியாற்றும் கெக்கிறாவ ஸஹானா வட-மத்திய மாகாணத்தில் இருந்து ஈழத்துப் படைப்புலகச் சூழலுக்கு காத்திரமான இலக்கியப் பங்களிப்பினை வழங்கிவருபவர். கோடரிக் காம்புகள், முடிவில் தொடங்கும் கதைகள், சுவர்கள், பார்வை, திரை, பனிக்கட்டி உருகிடின், பிச்சைக்காரன், கறுப்பும் வெள்ளையும், சங்கிலித் தொடர், பெண்மை-உண்மை, காட்டு நெடுவான நிலவு, சாக்கடை மேடையில் ஒரு மாநாடு ஆகிய தலைப்பில் இவரால் அவ்வப்போது எழுதப்பெற்ற பன்னிரு கதைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  233367).

ஏனைய பதிவுகள்

14329 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்: அரசியலமைப்புக்கான பதினேழாவது திருத்தம்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). 59 பக்கம், விலை: 49.25, அளவு 21×15 சமீ. இவ்வரசியலமைப்புச்