அஷ்ரஃப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கந்த ரோட், மாபோல, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்டர்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
xx, 127பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-8448-08-3.
ஆசிரியரின் அண்மைக்காலச் சிறுகதைகளின் தொகுப்பு. நாய்ப்பாசம், வெள்ளை வேன், வைத்தியம், சட்டத்தால் ஆகாதது, பூனைக்காய்ச்சல், டல் கோப்பி, விரல்களற்றவனின் பிரார்த்தனை, அவ்வெண்ணிலவில், அறுபத்தைந்தாம் கலை, அது, ரமளானில் ஒரு பகலுணவு, ஆசியாவின் அதிசயம், சுபியானின் சாகசங்கள், கல்லும் கனியாகும், பட்டாக்கத்தி மனிதர்கள், நம்பிக்கைத் துரோகம் ஆகிய 16 கதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233370).