9715 வேட்டைத்தோப்பு: சிறுகதைகள்.

கருணாகரன். சென்னை 600 024: கயல் கவின் புக்ஸ், 28, (பழைய எண் 20), டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600 005: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).

191 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 21.5×14 சமீ.

வேட்டைத்தோப்பு, கலசம், வேட்டை, நெருப்புக்காடு, வாசல்கள் ஆயிரம், உடைவு, காலம், கண்ணில் முளைத்த முள்வனம், வம்சக் கனவு, கருமையில் படரும் ஒளி, படகு, எலிகள் வாழ்ந்த புத்தகக் கட்டுகள், தேவன் வருவார், பரிசு ஆகிய 14 கதைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இதில் வேட்டைத்தோப்பு என்ற கதை முன்னர் பனங்காடு என்ற பெயரில் பிரசுரமானது. வம்சக் கனவு, காலம், கண்ணில் முளைத்த முள்வனம், கருமையில் படரும் ஒளி ஆகிய கதைகள் பிரஹலாத ஹேமந்த் என்ற புனைபெயரிலும், வேட்டை என்ற கதை காஞ்சனா என்ற புனைபெயரிலும் பிரசுரமானவை. கிளிநொச்சியில் வாழும் முன்னாள் போராளியான கருணாகரன் உணர்வுகளைத்தூண்டும் தன் கவிதைகளாலும் நன்கு அறியப்பெற்றவர். இவரது படைப்புகளில் நமது மண்ணின் மக்களின் தெளிவாகப் புலப்படாத சில காட்சிப்படிமங்கள் துலக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும்.  போர்க்காலத்தில் எழுதப்பெற்ற கதைகள் இவை. போர் தீவிரம் பெற்றிருந்த ஒரு காலத்தில்- வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் பாதைகளும் போர்க்களத்திற்கே என்று திணிக்கப்பட்டிருந்த ஒரு தருணத்தில் அது பற்றிப் பேசுவதற்கே  அஞ்சிய வேளைகளில் உருவாகிய உள்ளக் குமுறல்களே இங்கு சிறுகதைப் படைப்பிலக்கியப் பதிவுகளாகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236585).

ஏனைய பதிவுகள்

Betano Bonus Fără Achitare 2024

Content Bonus Luck 77 Rotiri Gratuite Casa Pariurilor Bonus Fără Plată: 600 Rotiri Gratuite Deasupra 30 Zile Excelbet Rotiri Gratuite Dar Vărsare Oferte Gets Bet

9437 ஆரோக்கிய வாழ்வுக்குச் சில ஆலோசனைகள்.

வி.ரி.இளங்கோவன். புங்குடுதீவு 3: மூலிகை வெளியீடு, சிகரம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A. தம்பி வீதி). iv, 32 பக்கம், விலை: ரூபா 10., அளவு: