9745 கட்டுரை மஞ்சரி: பகுதி 2: 10ம் 11ம் ஆண்டு.

சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1989 (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B A தம்பி வீதி).

iv, 64  பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை., அளவு: 20.5×13.5 சமீ.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்பு ஆண்டு 10, 11 மாணவர்களின் கட்டுரை எழுதும் ஆற்றலை வளர்ப்பதற்கும் அவர்களுக்கு அத்துறையில் வழிகாட்டுவதற்குமாக பல ஆண்டுகளாக 40 கட்டுரை மஞ்சரி என்ற நூல் ஆசிரியரால் பல பதிப்புகளாக வெளிவந்தவண்ணமுள்ளது. அவை 300 சொற்கள் அடங்கிய கட்டுரைகளுக்கு முன்னுரிமை வழங்கிவந்துள்ளது. இந்நூல் அத்தொடரின் இரண்டாம் பகுதியாக வெளிவந்துள்ளது. இதில் க.பொ.த. தேர்வில் கேட்கப்படும் மற்றொரு கேள்விப் பிரிவான அண்ணளவாக 100 சொற்கள் கொண்ட கட்டுரைகளை வடிவடைக்கும் பயிற்சிகள் இடம்பெறுகின்றன. நடைமுறை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததாகவும், மாணவரின் பிற்கால வாழ்க்கைக்கு உதவும் பயனுள்ள கருத்துக்களை எதிர்பார்த்தும் இக்கட்டுரைப் பிரிவில் உள்ள கேள்விகள் அமைவது வழமை. கடிதம், அறிக்கை, விளக்கம், துண்டுப்பிரசுரம், அறிவுரை, விளம்பரம் ஆகிய அறுவகை வடிவங்களில் இக்கட்டுரைகள் அமைகின்றன. இந்நூல் இத்தகைய 100சொற் கட்டுரை வடிவங்களுக்குத் தம்மை மாணவர் பரிச்சயப்படுத்திக்கொள்ள உதவுகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85837). 

ஏனைய பதிவுகள்

Verbunden Poker Österreich

Content Spielerschutz Unter anderem Verhütung Von Spielsucht Von Nachfolgende Malta Gaming Authority Die Beliebtesten Zahlungsmethoden Auf Online Pokerseiten Über Echtgeld Reload Maklercourtage Best Us Tatsächlich

11079 புதியதோர் உலகம் காணப் புறப்பாடு.

புறப்படுகை நியாயந்தான். முட்டுக்கட்டைகள் நீங்குமா? இ.சண்முகராசா (மன்றச் செயலாளர்). திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1989. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம்). 26 பக்கம், விலை:

Novoline Spiele Kosteblos Aufführen

Content Captain Venture: Treasures Of The Sea Features Of Novomatic Slots Weshalb Sollte Man Verbunden Kostenfrei Zocken? Die Vorteile Bringt Unser Via Einander? Bonus Within