எஸ்.சிவநிர்த்தானந்தா (புனைபெயர்: எஸ்.எஸ்.ஆனந்தன்). கொழும்பு: எஸ்.சிவநிர்த்தானந்தா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
(4), 56 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 22×14 சமீ.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான உப பாடநூல். இதில் திருக்குறள் ஒழிபியலில் வரும் பத்து அதிகாரங்களுக்குமான விளக்கம் தரப்பட்டுள்ளது. குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை, நன்றியில் செல்வம், நானுடைமை, குடிசெயல்வகை, உழவு, நல்குரவு ஆகிய பத்து விடயத் தொகுப்புகள் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 122689).