9845 எட்டாந்தரப் புவியியல்.

வி.கந்தவனம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 2வது பதிப்பு, 1970, 1வது பதிப்பு, 1968. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

ix, 168 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

இந்நூல் புதிய பாடத்திட்டத்திற்கும் வழிகாட்டிக்கும் அமைய ஆக்கப்பெற்றது. முதலாம் பருவத்திற்குரிய பாடங்களாக புவியின் அசைவுகளும் பருவ வேறுபாடுகளும், அகல-நெடுங்கோடுகள், இலங்கைப் புவியியல், நெல் வேளாண்மை, வியாபாரத் தானிய வகைகள், இலங்கையின் வணிகப் பயிர்கள், இலங்கையின் விளைபொருட்கள், பருத்திப் பயிர்ச்செய்கை ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத்திற்கான பாடங்களாக காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள், உலகின் காலநிலைப் பிரதேசங்கள், இலங்கையின் நீர்ப்பாசன முறைகளும் காணி அபிவிருத்தியும், விலங்கு வேளாண்மை-இறைச்சி, பால், மீன்பிடித் தொழில், காடுகளும் காட்டுத் தொழில்களும் ஆகிய பாடங்கள் அடக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பருவத்துக்குரிய பாடங்களாக இலங்கையின் கைத்தொழில்கள், இரும்பு உருக்குக் கைத்தொழில், நீர் மின்சக்தி, உலகின் குடிப்பரம்பல், உலகின் பிரதான வியாபாரப் பாதைகள், இலங்கையின் குடியிருப்புகள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 50 விளக்கப்படங்களுக்கான அட்டவணை இறுதியில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98799).

ஏனைய பதிவுகள்

Регистрация на 1win

Содержимое Промокод 1WIN при регистрации Промокод в 1win: активируйте действующие промокоды и играйте бонусами в 1win KZ Промокод 1WIN Основные данные Безопасность учетной записи Подтверждение

13608 கப்பல் (சிறுவர் கதை).

இலக்கியன் வெளியீட்டகம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 12 பக்கம்,