9849 செய்முறைப் புவியியல்:பகுதி 1.

S.T.B.ராஜேஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி கௌரி ராஜேஸ்வரன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (தெகிவளை: நியூட் குரூப், 28, எபனேசர் இடம்).

xix, 160 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 29.5×21.5 சமீ.

அளவுத் திட்டத்தின் பொருளும் முக்கியத்துவமும், படங்களைப் பெருப்பித்தலும் சிறுப்பித்தலும், தரைத்தோற்ற அம்சங்களை வெளிப்படுத்தல், சாய்வு ஆய்வு, வலைப்பின்னல் ஆய்வு, இடம்சார் பரம்பல் மதிப்பீடு, ஆரம்ப நில அளவை ஆகிய ஏழு இயல்களை உள்ளடக்கியுள்ள நூல். இந்நூலாசிரியர் யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் நெதர்லாந்திலுள்ள விமான அளவீடு, புவி விஞ்ஞானங்களுக்கான சர்வதேச நிறுவனத்தில் தொலைவு உணர்வு நுட்பமுறைகளினூடாக புவி வெளியுருவவியலில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். 1979ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகின்றார்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 124499).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Online Spielautomaten Casinos

Content Blood suckers Online -Slot – Was Ist Der Unterschied Zwischen Echtgeld Spielautomaten Und Gratis Spielautomaten? Trick 9: Den Spielautomaten Wechseln Gratis Spielautomaten Wo Kann

9533 செந்தமிழ் மழலைப் பாடல்.

பத்மா இளங்கோவன். சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி ஓப்செட்). 64