த.தியாகராசா. யாழ்ப்பாணம்: உயர்கல்வி வெளியீட்டகம். 124, பிரதான வீதி, கொழும்புத்துறை, 2வது பதிப்பு, ஆனி 2005, 1வது பதிப்பு, வைகாசி 1966. (யாழ்ப்பாணம்: லக்கி பிரின்டர்ஸ்).
84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 27.5×21 சமீ.
இந்நூல் பட எறியங்கள் (தேசப்படங்களும் எறியங்களும், எறியங்களின் பாகுபாடு, எறியங்களின் அமைப்பு முறையும் இயல்புகளும், எறியங்களைத் தெரிவுசெய்தல்), வரைபடங்கள் (புவியியல் தரவை வரைபடங்களில் அமைத்தல், கோட்டு வரைபடம், பல்கோட்டு வரைபடம், பார் வரைபடங்கள், பரப்பு விளக்கப்படங்கள், பரம்பற் படங்கள், சித்திர வரைபடங்கள், அமைய நாட்ட அளவீடுகள், பிரிகை அளவீடுகள், மீடிறன் வரைபடங்கள்), நில அளவீடு (நில அளவீடு அன்றும் இன்றும், சங்கிலி நில அளவீடு, மாதிரிப் பயிற்சிகள்), பட வேலை (தேசப்படங்களும் அவற்றின் அடிப்படைகளும், தேசப்படங்களைப் பெருப்பித்தலும் சிறுப்பித்தலும், சம உயரக் கோட்டமைப்புகளும் நில உருவங்களும், மாதிரிப்படம் அமைத்தல், படம் அமைத்தல் இடவிளக்க மாதிரிப்பயிற்சிகள்) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. சம உயரக் கோட்டுப்படம், உலகப் படத்திற் குறித்தல் என்பன பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 190386).