9861 கனகராயன் ஆற்று வடிநிலம்: ஒரு புவியியல் ஆய்வு.

சுபாஜினி உதயராசா. யாழ்ப்பாணம்: சுபாஜினி உதயராசா, சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பதிப்பகம், 72, பலாலி வீதி, திருநெல்வேலி).

xiv, 230 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52092-0-5.

வன்னிப் பிரதேச அபிவிருத்தியின் உயிர்நாடியான நீர்வளத்தின் பெரும்பகுதியை கனகராயன் ஆற்று வடிநிலமே வழங்குகின்றது. வன்னியை வளம் செய்யும் நீர்த்தேக்கங்கள்,விவசாயத்திற்கு ஏற்ற வளமான நிலங்கள் என்பன கனகராயன் ஆற்று வடிநிலத்திலேயே அமைந்துள்ளன. இந்நூல் கனகராயன் ஆற்றுவடிநிலம் பற்றிய ஒரு விரிவான பார்வையை வழங்குகின்றது.  இந்நூல் ஆசிரியரின் முது தத்துவமாணிக்கான ஆய்விற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைக்கு வழங்கப்பட்டது. இவ்வாய்வு ஆய்வுப் பிரதேச அறிமுகம், ஆய்வுமுறையியல், கனகராயகன் ஆற்று வடிநிலத்தின் பௌதீக புவியியல் பின்னணி, கனகராயன் ஆற்று வடிநிலத்தில் காணப்படும் குடியேற்றத் திட்டங்களும் நிலப்பயன்பாடும், ஆய்வுப்பிரதேச சமூக பொருளாதார மதிப்பீடு, பிரச்சினைகளும் தீர்வுகளும், கருதுகோள் பரிசீலனையும் அபிவிருத்திக்கான ஆலோசனையும் ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218430).

ஏனைய பதிவுகள்

14682 ஈழத்து உளவியற் சிறுகதைகள்.

கே.எஸ்.சிவகுமாரன் (ஆசிரியர்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94:

Us Online casinos

Content Spend By the Mobile phone Gambling enterprises Inside Number | significant link Better Pay By the Mobile phone Casinos Canada 2024 Benefits of Spend