9875 தவத்திரு மகாதேவ சுவாமிகள் நூற்றாண்டு நினைவு மலர்.

மு.கணபதிப்பிள்ளை (மலர் ஆசிரியர்). கொழும்பு: மகாதேவ சுவாமிகள் நூற்றாண்டு நினைவுவிழாக் குழுவினர், 1வது பதிப்பு, 1975. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xxiii, 202 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ.

நல்லூர் ஆறுமுகநாவலருக்குப் பின்னர் அவர் காட்டிய நெறிக்கும், தமிழ் மொழிக்கும், கல்வி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அயராது உழைத்துவந்தவர்களுள் மகாதேவ சுவாமிகள் ஒரு தனி இடத்தினை வகிக்கின்றார். இந்நூல் அவரது நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் முகமாக அவரது வாழ்வும் பணிகளும் பற்றிய கட்டுரைகளுடன் வெளிவருகின்றது. வாழ்த்துரைகளுடன், நடைமுறைத் தமிழ் இயக்கம் (அறிமுகம்), மு.கணபதிப்பிள்ளை (நுழைவாயில்), க.கி.நடராஜன் (மலர் வாழ்த்து),  வடிவேற் சுவாமிகள் (மகாதேவ குருமணி தோத்திரம்), சி.கணபதிப்பிள்ளை (யாருக்கும் இனியவர்), கு.முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (தவத்திரு மகாதேவ சுவாமிகள் புகழ்மாலை), ஐ.வைரவநாதன் (நான் கண்ட மகாதேவ சுவாமிகள்), பொ.கந்தையா (மகாதேவ மாமுனிவன் திருவடிக்கண் சாத்திய ஒருபா ஒருபஃது), சோ.சிவபாதசுந்தரம் (மகாதேவ சுவாமிகள்), செ.சிவப்பிரகாசம் (குரு மகாதேவர் வாழ்க), இ.திருநாவுக்கரசு (மெய்க்கீர்த்தி நுதலிய மடல்), இ.மாணிக்கம் (மகாதேவ சுவாமிகள் காலம்), வே.செல்லையா (மகாதேவ சுவாமிகள் மாண்பு), சோ.தியாகராசபிள்ளை (கரம் கூப்பித் தொழுகின்றோம்), க.கிருஷ்ணபிள்ளை (மகாதேவ சுவாமிகளை மறத்தலுமாமோ), நடைமுறைத் தமிழ் இயக்கம் (கரம்பொன் தந்த திருத்தொண்டர் சுவாமி மகாதேவா), க.நவரத்தினம் (இசையும் வாழ்க்கையும்), செ.தனபாலசிங்கன் (செத்தபின் சிவலோகமா? இல்லை வாழ்கிறபோதே வைகுண்டம் சிவலோகம்), தெல்லியூர் செ.நடராசா (கரம்பொன் ஈன்ற முத்து-ஆன்மீக வள்ளல் மகாதேவ சுவாமிகள்) ஆகியோரின் ஆக்கங்கள் மலரைச் செழுமைப்படுத்துகின்றன. நூலின் பின்னிணைப்பாக கொழும்புத்துறை ஹே.சுப்பிரமணிய ஐயர் இயற்றியதும் தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை பதிப்பித்ததுமான ஆத்மவிசாரம் என்ற நூலின் இரு பாகங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe Automat Zulegen

Content Kunde Zum Problem Book Of Ra Roboter Bedienungsanleitung Auszahlung: Gewinne Über Kasino Prämie Exklusive Einzahlung No Anzahlung Provision Gambling 50 No Frankierung Spins Frog

Betfair 100 Free Spins

Content Are Online Casinos Safe To Play?: Book Of Ra Deluxe online slot Can I Win Real Money On Betfair Casino Free Spins? How To