9894 ஆறுமுக நாவலர் அவர்களின் சரித்திரச் சுருக்கமும் அவர்கள் இயற்றியருளிய தனிப்பாமாலையும்.

சி.செல்லையாபிள்ளை (மூலம்), இரா.வை.கனகரத்தினம் (பதிப்பாசிரியர்). புங்குடுதீவு: அன்புதாசன் வெளியீடு, 2வது பதிப்பு, மார்ச் 1996. 1வது மூலப் பதிப்பு, 1914. (சென்னை 5: கவிக்குயில் அச்சகம்).

xxviii, 232 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 18×12.5 சமீ.

பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி அவர்களின் அணிந்துரையும், கலாநிதி வித்துவான் க.ந.வேலன் அவர்களின் சிறப்புப்பாயிரமும், இந்நூலின் பதிப்பாசிரியர் இரா.வை கனகரத்தினம் அவர்களின் விரிவான பதிப்புரைiயும் கொண்டதாக இந்நூல் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மூலப்பதிப்பு, 1914இல் சி.செல்லையாபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு “யாழ்ப்பாண நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்களியற்றியருளிய தனிப்பாமாலையும்” என்ற தலைப்பில் (நூல்தேட்டம் பதிவிலக்கம் 7862) கொழும்பு கொம்பனித்தெரு, மீனாம்பாள் அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. நாவலர் மறைவுக்குப் பின்னர் அவர் பற்றி வெளிவந்த ஆரம்பகால நூல்களுள் இது முக்கியமான ஒரு பிரசுரமாகக் கருதப்படுகின்றது. அருணாசலக் கவிராயர் 1898 இல் பாடிய யாழ்;ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் சரித்திரம், வட்டுக்கோட்டை அம்பலவாண நாவலர் 1919இல் எழுதிய சற்குரு மணிமாலை ஆகிய நாவலரியல் நூல்களுடன் இந்நூலும் முக்கியமானதாகக் கணிக்கப்பெற்றிருந்தது. 1914இல் வெளியான மூல நூலின் மீள்வருகையாக இந்நூலை நாவலர் பற்றிய மேலதிக தகவல்களுடன் வெளியிட்டுள்ளனர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 123644).

ஏனைய பதிவுகள்

The Role of Corporate Software

In the past, a majority of businesses conducted their operations by hand. This often led to mistakes and delays. Software tools have transformed the traditional