9901 இலங்கையில் வைத்தியர் அலிஸ்டி புவர் மற்றும் முன்னோடிகளான சில பேகர் பெண் வைத்தியர்களும்.

டிலோரெய்ன் புறோஹியர் (ஆங்கில மூலம்), கந்தையா சர்வேஸ்வரன் (தமிழாக்கம்). கொழும்பு  5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, 1997.(கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்).

66 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9102-20-6.

பெண்களின் வரலாற்றை மீட்டெடுத்தல் என்ற அடிப்படையில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு இது. பொருளாதார, சமூக படிநிலைகளில் கீழ்நிலை உத்தியோகங்களிலேயே பங்களிப்பு நல்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்த பெண்களின் ஒரு சாரார் தனித்துவமானதும் சமூக கௌரவம் மிக்கதுமான வைத்தியத்தொழிலில் 19ம் நூற்றாண்டுகளிலேயே வெற்றிகரமாக ஈடுபட்டதெப்படி என்பதை இந்நூல் ஆராய்கின்றது. இலங்கையில் 1870இல் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 1892இலேயே பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியர் அன்ட்றோஸ் நெல் இன் சகோதரியும் 1890இன் ஆரம்பப்பகுதிகளில் வைத்தியராகப் பணியாற்றியவருமான வினிபிரெட் நெல், மற்றும் வைத்தியர் ஆர்.எல்.ஸ்பிட்டெல் இன் துணைவியார் வைத்தியர் கிளாரிபெல் வான் டோட் ஸ்பிட்டெல், இலங்கையின் முதற் பெண் மருத்துவர் அலிஸ் டி புவர், என ஒரு மறக்கப்பட்ட பட்டியல் இந்நூல் வழியாகப் பதிவுபெறுகின்றது.  மருத்துவர் அலிஸ் டி புவர் அவர்களின் சகோதரியின் பேத்தியின் வழியாக இந்நூல் உருவாகியுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் நவீன இலங்கையின் உருவாக்கத்தில் முக்கிய பங்கேற்ற பேர்கர் சமூகத்திலிருந்தே இந்த வைத்தியர்கள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 132811).

ஏனைய பதிவுகள்

Online casino

Posts Greeting Incentives And you may Black-jack | see web site Can i Gamble Online Within the 2024? The best Sweepstakes Gambling enterprise Slots Security

17887 நாற்பது வருட பணி வாழ்வில் அருட்கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல்.

கமிலஸ் துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: கமிலஸ் துரைசிங்கம், ஒபகௌசன், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24  பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. அருட்கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களின் நாற்பது

Agradável Afinar Poker?

Content Jogos Acostumado Faq Infantilidade Jogos Acostumado Considerações Básicas Da Ardil Puerilidade Poker Isso pode ajudá-lo a melhorar suas próprias habilidades e assentar-se tornar conformidade