9915 கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்.

சிலோன் விஜயேந்திரன். சென்னை 4: அல்லயன்ஸ் கம்பெனி, த.பெ.எண் 617, மயிலாப்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (சென்னை 17: T K Qulity Printers).

176 பக்கம், தகடுகள், விலை: ரூபா 15., அளவு: 17.5×12 சமீ.

தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் திண்டிவனம் பகுதியில் உள்ள உலகாபுரம் கிராமத்தில் பிறந்த அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் கம்பதாசன் (15.9.1916-23.5.1973) என்ற பெருங் கவிஞனை தமிழகமே மறந்துவிட்ட நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது மகத்தான கவித்திறனையும் காவியப் புலமையையும் முதன்முதலாக முழுமையாக அடையாளப்படுத்திய பெருமை ஈழத்தவரான கவிஞர் சிலோன் விஜயேந்திரனுக்கேயுரியது. கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், கம்பதாசன் குடும்பம், சென்னை விஜயம், பள்ளிப் படிப்பு, முதல் திரைப்படப் பிரவேசம், பாரதிதாசனும் கம்பதாசனும், திரைப்படப் பாடற் பணி, முற்போக்குச் சிந்தனையாளர் கம்பதாசன், கவிஞர் நோக்கில் கவிஞர், இசைமேதை நௌஷாத்தும் கம்பதாசனும், சித்ராவின் காதல், கம்பதாசனின் திரைப்படச் சாதனைகள், கம்பதாசனுக்கு வந்த சோதனைகள், கம்பதாசன் எழுதிய இலக்கிய நூல்களும் இன்றைய தலைமுறையினரும், கம்பதாசனின் இறுதி நாட்கள், பழகியோர் பார்வையில் கம்பதாசன், மக்கள் கவி கம்பதாசனின் முற்போக்கு முரசு, கம்பதாசனின் பல்துறைப் பாக்களும் அவற்றின் பாங்கும், கம்பதாசன் காவியத்திறன் (வேளை வந்தது, புத்தர் புனர்ஜென்மம், கனவு, காணிக்கை, இரத்த ஓவியம், கற்கனி), கம்பதாசன் இசைத்தமிழ் இன்பம், கவிதாதேவியை மறக்காத கம்பதாசன், நூல் முடிவுரை ஆகிய 22 இயல் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 99806).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Real cash Revolves

Articles Incentive Have Totally free Compared to A real income Online game Telegram Local casino On line Totally free Revolves: Victory A real income Using