9916 குருகவி ம.வே.மகாலிங்கசிவம்: வரலாறும் ஆக்கங்களும்.

பா.மகாலிங்கசிவம். யாழ்ப்பாணம்: பட்டப்படிப்புகள் கல்லூரி, ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், காங்கேசன்துறை வீதி).

xiii, 84 பக்கம், தகடுகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×15 சமீ.

நூலாசிரியர் மகாலிங்கசிவம் தனது தந்தையின் (புலவர் ம.பார்வதிநாதசிவம்) தந்தையாராகிய குருகவி ம.வே.மகாலிங்கசிவம் பற்றிய தகவல்களைக்கொண்டு தொகுத்துள்ள நூல் இது. மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், ஈழமண்டலச் சதகம் என்ற பிரபல நூலின் ஆசிரியரும், சிதம்பரத்தில் நாவலர் நிறுவிய பாடசாலையின் அதிபராகப் பணியாற்றியவருமான உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையின் ஐந்து புதல்வர்களில் மூன்றாவது மகனே குருகவி ம.வே.மகாலிங்கசிவம். ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் தனது பதினோராவது வயதில் பழனிப் பதிகம் பாடிய குருகவி ம.வே. மகாலிங்கசிவம், பண்டிதமணியின் வாயால் குருகவி என்று பெயர்பெற்றவர். இவரது  ஆக்கங்களான பன்னிரு கவிதைகள், சிறுகதைகள் ஆகியனவும், குருகவி பற்றிய ஒன்பது கட்டுரைகள், நான்கு கவிதைகள் என்பனவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவரது அறிவையும் புலமையையும் அவர் காலத்திலேயே கண்டுணர்ந்த பல பெரியார்களின் எட்டுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் சிறப்பிடம்பெற்றுள்ளன. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, சுவாமி விபுலானந்தர், க.சி.குலரத்தினம், மட்டுவில் கா.சிவபாலன், பண்டிதை அமிர்தாம்பிகை, வேலணை மருதையினார், புங்குடுதீவு கு.வி.செல்வத்துரை, முதலியோரின் பன்முகப்பட்ட கட்டுரைகளின் வழியே குருகவி ம.வே.மகாலிங்கசிவம் பற்றிய பல தகவல்களை  இந்நூல்வழியாக அறியமுடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  192417). 

ஏனைய பதிவுகள்

Avis sur les casinos en ligne

3 mines game Mines game download real money Avis sur les casinos en ligne This string is then converted into a SHA512 hash, an advanced

Roblox Speisezettel zulegen: angeschlossen

Content Schnelle auszahlung online casino ohne einzahlungsbonus – Möglichkeiten Bitcoin ohne Eintragung nach anschaffen! Tagesordnungspunkt 5 Ernährer um folgende Paysafecard via Zählung hinter buchen: Paysafecard