9937 இலங்கைச் சரித்திரமும் உலக சரித்திரமும்: முதலாம் பாகம்: கி.பி.1505 வரை.

மு.இளையதம்பி. காரைநகர்: மு.இளையதம்பி, சரித்திர ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி, 5வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1955, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1961, 4வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

(5), 127 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.25, அளவு: 17.5×12.5 சமீ.

இந்நூலின் இரண்டாம் பாகம் 1505-1796 காலகட்டத்துக்குரிய வரலாற்றை விளக்கி எழுதப்பட்டிருந்தது.  பின்னர் 1955இல் இந்த முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. கி.பி. 1505 வரையுள்ள இலங்கைச் சரித்திரத்தையும் உலக சரித்திரத்தையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இலகுவான வசன நடையில் ஆசிரியர் எழுதியுள்ளார்.  ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் அப்பியாசங்களும் வினாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பூர்வீக இலங்கை, சிங்களரின் வருகை, பௌத்த சமயமும் அது இலங்கைக்கு வந்த வரலாறும், தமிழரின் வருகை, எல்லாளனும் துட்டகெமுனுவும், கீர்த்திபெற்ற சிங்கள மன்னர்கள், குப்தர் ஆளுகையும் இலங்கையிலேற்பட்ட கலை வளர்ச்சியும், நிர்வாக அமைப்பும் வாழ்க்கை முறையும், சிங்கள அரசர்கள் (கி.பி 460-496), யாழ்ப்பாணம், தென்னிந்தியாவில் பல்லவரின் ஆட்சி, இலங்கையில் சோழ அரசர்களின் ஆதிக்கம், சோழ அரசர்களுக்குப் பின் ஆண்ட சிங்கள அரசர்கள், நிர்வாக முறையும் மக்களின் வாழ்க்கையும், பிற்காலச் சிங்கள அரசர்களும் சிங்கள அரசின் வீழ்ச்சியும் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இந்நூலில் வரலாறு விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசித்தவர்.

ஏனைய பதிவுகள்

Reglamento bonus 1XBET

Durante mayoridad de los casos, los tiradas llegan a convertirse en focos de luces jugarán acerca de juegos seleccionados por el sitio de el casino.

13063 நான் யார்?

எஸ்.ஜே.யோகராசா. கொழும்பு 15: எஸ்.ஜே.யோகராசா, 65/322 காக்கை தீவு, மட்டக்குழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). viii, 96 பக்கம், விலை: ரூபா 100.,

11000 மாற்றுவெளி ஆய்விதழ்: போருக்குப் பிந்தைய ஈழம்.

வீ.அரசு (சிறப்பாசிரியர்), தெ.சுகுமாரன் (அழைப்பாசிரியர்). சென்னை 600106: பரிசல் புத்தக நிலையம், ப.எண் 96, ஜெ.புளொக், நல்வரவு தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், 1வது பதிப்பு, அக்டோபர் 2011 (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை).