9950 இலங்கைத் தமிழர் வரலாறும் இன்றைய நிலையும்.

பூ.ம.செல்லத்துரை. மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம், 1வது பதிப்பு, மே 1999. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ், 205/2 பார் வீதி).

xii, 132 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14.5 சமீ.

நூலாசிரியர் கிழக்கிலங்கையின் பெரியபோரதீவைச் சேர்ந்தவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புக் கிளைச் செயலாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றியவர். தாயகம், நேர்வழி, சமநீதி, தேனாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இலங்கைத் தமிழரின் வரலாற்றுப் பக்கங்கள் சிலவற்றைத் தனது பார்வையில் இந்நூலில் பகிர்ந்துகொள்கின்றார். குமரிக்கண்டமும் இலங்கையும், இலங்கையின் பழங்குடி மக்கள், சிவனொளிபாதமலையும் சைவமும், விஜயன் தமிழன், சிங்கள வரலாற்றாரிசிரியர்கள் இழைத்த முக்கியமான தவறு, இலங்கையின் பூர்வீக குடிகள் யார்? இலங்கை அரசியலோடு தொடர்புடைய கலிங்கம், சுமேரியர் இலங்கைத் தமிழர்களே, திராவிடர்களே பௌத்தத்தைத் தழுவி சிங்களவரானார்கள், கிழக்கிலங்கையில் தமிழராட்சி, உலக மொழிகளின் தாய் தமிழே, இலங்கை அரசியலில் தமிழ் மொழி, ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் வட பகுதியில் தமிழாட்சி இருந்தது, நாகர்கள் உண்டாக்கிய பௌத்தம், மாந்தையில் மலர்ந்து மாநிலமெங்கும் மணம்பரப்பிய தமிழர் நாகரீகம், தமிழ் செமத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததா?சிங்கக் கொடி சிங்களவர்களுடையதா? சிங்களவர்கள் இழந்த உரிமைகள் யாவை? துட்டகாமினி-எல்லாளன் யுத்தம் தமிழ்-சிங்கள யுத்தமா?சிங்களத் தலைவர்களும் இணைப்பாட்சியும் ஆகிய இருபது தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 132852).

ஏனைய பதிவுகள்

12966 – பண்டைய ஈழம்: இரண்டாம் பாகம்: பொலன்னறுவைக் காலமும் பிந்திய காலங்களும்.

வே.க.நடராசா. யாழ்ப்பாணம்: சேது நூலக வெளியீடு, கேவளை, கரவெட்டி, 3வது திருத்திய பதிப்பு, மாசி 1973. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி). viii, (24), 218 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா

10987 கள்ளத்தோணி.

M.A.அப்பாஸ். சென்னை 01: நவபாரத் பதிப்பகம், தபால் பெட்டி நிர். 1647, 3வது பதிப்பு, பெப்ரவரி 1954, 1வது பதிப்பு, ஜுன் 1953, 2வது பதிப்பு, ஜுலை 1953. (சென்னை: ஏ.பீ.ஜே. அச்சகம்).  162