9956 ஒரு விவரணக் கருத்துரை: பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்புக்கள், நடைமுறைகள் பற்றிய கருத்தரங்குத் தொடர்கள்: சில படிப்பினைகளும் சிந்தனை வெளிப்பாடுகளும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (ஆங்கில மூலம்), கேதீஸ் லோகநாதன் (ஒருங்கிணைப்பாளர்).  கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 955-8037-26-5.

கொழும்பு- இலங்கை மன்ற நிறுவனத்தில் 13 வைகாசி 2000, 27 வைகாசி 2000 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வுகள் தொடர்பான விவரணக் கருத்துரை. இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான நோர்வேயின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைக் காலகட்டத்தின் தொடக்கத்தில்  பேச்சுவார்த்தைகளின்  கட்டமைப்பு, செயன்முறை என்பவற்றின் பல்பரிமாண அம்சங்களை ஆராய்வதின் அவசியம் உணரப்பட்டது. அவ்விடயங்களை விளங்கிக்கொள்ளும் நோக்கில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் இருபகுதிகளைக்கொண்டதொரு  கருத்தரங்கை 2000ஆம் ஆண்டு வைகாசியில் நடத்தியது. தொழிற்படக்கூடிய செயல்திறன் மிக்க தொகுப்பொன்றைக் கண்டறியும் முயற்சியில் இக்கருத்தரங்கின் ஒரு பகுதி கட்டமைப்பையும், மறுபகுதி செயன்முறையையும் தமது இலக்காகக் கொண்டிருந்தன. இத்தொடக்கச் செயற்பாடு, ஆனையிரவு வீழ்ச்சியுற்ற தருணத்தில் அரசாங்க அனுசரணையுடனான போரில் கால்வைப்பு நிலைமை தீவிரமாக்கப்பட்டு, ஊடகத்தணிக்கை  மிகத்தீவிரமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கின் பலனாக கண்டறிந்த கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

sic funktioniert das Slots-Erwerb

Content Kennen Eltern die Grundlagen, vorab Eltern aufführen – 50 kostenlose Spins keine Einzahlung Sizzling Hot Deluxe Legal Oberbau des Slots Legzo Kasino 🤚 Sie