9970 தமிழன் எங்கே.

மு.கணபதிப்பிள்ளை. கொழும்பு 2: ஈழமணி நூற் பதிப்பகம், 60, குமாரன் இரத்தினம் வீதி, 2வது பதிப்பு, 1961, 1வது பதிப்பு, 1958. (கொழும்பு 2: கொமர்ஷியல் ஹவுஸ் லிமிட்டெட்).

(13), 68 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.

தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள் தன் பன்மொழி ஆய்வின் பயனாக தமிழர் வரலாறு பற்றிய பல்வேறு தகவல்களைத் தொகுத்து விரிவானதொரு ஆய்வை மேற்கொள்ள உதவும் வகையில் இந்நூலைப் படைத்துள்ளார். நூல் வெளியிடப்பட்ட காலகட்டத்தில் இவர் குறிப்பிட்ட தமிழ்-தமிழன்-தமிழகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் புதினமாகவும் புதிய திசைநோக்கி தமிழ் ஆய்வுகளை நகர்த்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்நூலுக்கு பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை வழங்கிய சால்புரை கோடிட்டுக் காட்டுகின்றது. ஆசிரியர் புரட்சிகரமான புதுமைக் கருத்துக்களையும் சிந்தனை ஓட்டத்தையும் இந்நூலில் சிறு தலைப்புகளினூடாக விபரிக்கின்றார். இராவணன் யார், மூநாடு எது, முத்தொள்ளாயிரமா மூத்தொள்ளாயிரமா, தொல்காப்பியர் பிறப்பகம், தம்பரட்டா-தாமிரபரணி தேசம், என்பன போன்ற பல்வேறு குறுந்தலைப்புகளில் தகவல்கள் இந்நூலில் பொதிந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87015).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Dragon Slots

Articles Could there be A totally free Playing Form of The fresh Controls Away from Luck Slot machine game? Deluxe Ports Using this type of

16241 பசுமை அமைதி விருதுகள் : சூழல் பொது அறிவுப் பரீட்சை.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். யாழ்ப்பாணம்: கிருபா லேணர்ஸ், இல. 226, கஸ்தூரியார் வீதி, 1வது பதிப்பு, 2021. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,