ஏ.சூசை ஆனந்தன். யாழ்ப்பாணம்: நடமாடும் துவிச்சக்கரவண்டி மீன் வணிகர் மன்றம், பலாலி வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: ஸ்ரீனா அச்சகம்).
x, 74 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளரான சூசை ஆனந்தன் எழுதியுள்ள நூல். கச்சதீவு அதன் புவியியல் பின்னணி, கச்சதீவு உரிமைப் பிரச்சினையும் வரலாற்றுப் பின்னணியும், கச்சதீவு உரிமை தொடர்பான கோரிக்கைகளும் எதிர்க் கோரிக்கைகளும், 1974ஆம் ஆண்டு உடன்படிக்கை, 1976ஆம் ஆண்டு உடன்படிக்கை, 1983இன் பின்னர் வட பகுதிக் கடற்பரப்பில் ஏற்பட்ட நிகழ்வுகள், சுமுகமான தீர்வை நோக்கி ஆகிய பிரதான தலைப்புகளின்கீழ் கச்சதீவு பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 115971).