9992 மருதமுனையின் வரலாறு: ஆள்சார் கண்ணோட்டம்: பாகம் 2.

முகம்மதுத் தம்பி முகம்மது நௌபல் (மூலம்), எம்.எம்.மிஹ்ழார் (பதிப்பாசிரியர்). மருதமுனை: ஆயிஷா வெளியீட்டகம், 520, மசூர்மௌலானா வீதி, 1வது பதிப்பு, 2012. (மருதமுனை: அப்னா அச்சகம்).

x, 54 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54169-2-4.

மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகமாணி சிறப்புப்பட்டம் பெற்றவர். பட்டதாரி ஆசிரியராக மருதமுனை கமு/அல்மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் சிறிதுகாலம் பணியாற்றியவர். இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு அட்டாளைச்சேனை, பொத்துவில், ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் பணியாற்றிய பின்னர், கல்முனை பிரதேச செயலாளராகப் பணியாற்றுகின்றார். இந்நூலில் ஆள்சார்கண்ணோட்டத்தின் வழியாக (individual perspective) மருதமுனையின் சமூக வரலாற்றை படம்பிடித்துக்காட்டுகின்றார். அவ்வகையில் மருதமுனை மண்ணின் மக்களான செயினுலாப்தீன் முகைதீன்பாவா (1951), செய்யது சாலி மௌலானா பாரிமௌலானா (1943), முகம்மது காசிம் மரைக்கார் அஹமது முகைதீன் (1945), செய்யது முஹம்மது முஹம்மது பழீல் (1938), முகம்மது சம்சுதீன் ஐயூப் (1936), இப்றாலெவ்வை முகம்மது இஸ்மாயில் (1931), அசனார் லெவ்வை தாவுத்லெவ்வை மரைக்கார் (1932), செயின் மௌலானா மசூர் மௌலானா (1932), ஆதம்பாவா அப்துல் ரஹீம் (1925), ஆதம்சாஹ் ஹபீப் முகம்மது (1920), ஆதம்பாவா பக்கீர் முகைதீன் (1917), சுலைமாலெவ்வை அலியார் ஹாஜியார் (1896), மீராலெவ்வை இப்றாலெவ்வை (1833) ஆகியோர் பற்றிய வாழ்க்கை வரலாறு கொண்ட 13 கட்டுரைகளுடன், மருதமுனையிலிருந்து வெளிவந்த முனைமலர் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட நூலாசிரியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Lezen over u liefste winkansen

Capaciteit Spelle in gij meest winkans Liefste Bank BONUSES Een bankroll klaarmaken plus een budge liefhebben indien het voordat echt poen speelt Authentiek Bank Strategieën