8001 அறிவு மஞ்சரி.

இ.ஸ்ரீஸ்கந்தராஜா. கொழும்பு 6: இ.சிறிஸ்கந்தராஜா, 93, பீட்டர்ஸன் லேன், E15 பீட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).

103 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 130., அளவு: 19×13.5 சமீ.

ஓர் இரு வரிச் செய்திகளாக, பல்சுவை புதுமைச் செய்திகளின் தகவல்களைஅற்புதமாகத் திரட்டித் தந்துள்ளார். இந்நூலில் அரசியல், விளையாட்டு, சங்கீதம், சமயம், சினிமா, இலக்கியம், புவியியல், விலங்கினங்கள் என 1450 பல்சுவைத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நகைச்சுவை வேந்தராக ஈழத்தமிழரிடையே அறிமுகமாகியுள்ள இராமசாமி சிறீஸ்கந்தராஜா, இதுவரை 10 நூல்கள் வரை தொகுத்துள்ள பன்னூலாசிரியருமாவார். இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் வழித்தோன்றல்களில் ஒருவர்.

ஏனைய பதிவுகள்