8120 முத்தான சொத்து.

அருட்சகோதரி யுஸ்ரீனா (மூலம்), அருட்சகோதரி பிரிட்ஜெட் மல்லிகா (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: வடமாநில திருக்குடும்ப நிறுவனம், 1வது பதிப்பு, ஜுன் 2009.(ஸ்ரீலங்கா: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்).

xxx, 531 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-51658-0-8.

வடமாநில திருக்குடும்ப நிறுவனத்தின் 150ஆவது அகவையை நெருங்குவதை முன்னிட்டு எழுதப்பட்ட நூல் இதுவாகும். இலங்கையிலிருந்து முதல் பெண் துறவிகளை திருச்சபைக்கு வழங்கிய பெருமை யாழ்ப்பாணத்தையே சாரும். திருக்குடும்பச் சபையின் அருட்சகோதரிகளே யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த முதற் கத்தோலிக்க பெண் துறவிகளாவர்.  இவர்களது வருகை 1862இல் இடம்பெற்றது. அண்ணளவாக 146 ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றி இன்று முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தின் சமூக, பண்பாட்டு, அரசியல் சூழலுக்குத் தம்மை இசைவாக்கம் செய்துகொண்ட  இவ்வருட்சகோதரிகளின் ஆரம்பகால முன்னோடிகள் ஐரோப்பாவிலிருந்து  வருகைதந்த  அருட்சகோதரிகளாவர். அவர்கள்  76 ஆண்டுகளாக (1861-1938)  எழுதிவைத்த 45 நூல்களில் அமைந்த  இலங்கை (குருநாகலை) மற்றும் யாழ்ப்பாணம் தொடர்புபட்ட வருடாந்த வாழ்வின் நிகழ்வு அறிக்கைகள் (Annals) பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு இங்கு நூலுருவாக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  219962).

ஏனைய பதிவுகள்