ச.முருகையா (புனைபெயர்: முருகு). யாழ்ப்பாணம்: வாஹினி வெளியீட்டகம், 90 மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரிண்டர்ஸ், நீராவியடி).
xx, 125 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.
கல்வயலைப் பிறப்பிடமாகவும் கொழும்புத்துறையை வாழ்விடமாகவும் கொண்டுள்ள கவிஞர் ச.முருகையா கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதை, சிறுகதை, கீர்த்தனை ஆகிய துறைகளில் எழுதிவருகின்றார். யாழ்ப்பாணத்துப் பக்திப் பாவலர் வரிசையில் சிறப்பிடம்பெறும் இவர் சுமார் 500 கீர்த்தனைகளைப் பாடியளித்துள்ளார். நூலுருவில் இவரது எட்டாவது படைப்பாக வெளிவரும் அருள்மிகு வாரியப்பர் பாமாலையின் மூலம், அருள்மிகு அமிர்தபாஷிணித் தாயாருடனுறை வாரியப்பர் பெருமானும், வாரிவனத் திருத்தலமும், பதுமதீர்த்தமும், பாடல்பெற்ற மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் பெருமைக்குரியனவாகின்றன.