8159 தீப பூஜா: திருவிளக்குப் பூஜை.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 3வது பதிப்பு, ஏப்ரல்; 2007, 1வது பதிப்பு, 1992, 2வது பதிப்பு, 2003. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

iv, 20 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20×14 சமீ.

லட்சுமி கடாட்சத்தை வழங்கும் திருவிளக்குப் பூஜை எனத் தமிழில் அறியப்பெற்ற தீபபூஜை பற்றிய தமிழ் விளக்கங்களுடன் கூடிய இந்நூல், வித்தியாபூஷணம், சாதக சிரோமணி,  பிரம்மஸ்ரீ  ப.சிவானந்த சர்மா அவர்களால் தொகுக்கப்பெற்றது.  இலங்கையிலும் இந்தியாவிலும் திருவிளக்குப் பூiஐக்குரிய பல நூல்கள் அவ்வப்போது வெளியாகியுள்ளன. சம்ஸ்கிருத மொழியில் கிரந்த லிபியில் முழுமையான ஒரு பத்ததி நூலாக முதன்முதல் நீர்வேலி பிரம்மஸ்ரீ தி.நடனசபாபதி சர்மா அவர்களால் எழுதப்பெற்ற நூல் 1992இல் வெளிவந்தது. அதன்பின்பு அந்த நூலைப் பின்பற்றி 2003இல் தமிழ் விளக்கங்கள், தமிழ்ப் பாடல்கள் என்பன சேர்க்கப்பட்டு தென்கோவை சிவஸ்ரீ இ.பிரணதார்த்திஹரக் குருக்கள் தம்பதிகளின் சஷ்டியப்த பூர்த்தியையொட்டி வெளியிடப்பட்டது. ஏறக்குறைய அதே வகையில் இந்நூல் சர்வானந்தமய பீட வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Casino Echtgeld Paypal 2024

Content 50 dragons Online -Slot – Kann Ich Slots Vor Der Echtgeld Nutzung Testen? Die Wichtigsten Informationen Rund Um Book Of Ra Fixed Online Finest