ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 2009, 1வது பதிப்பு, மார்ச் 2009. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
(4), 40 பக்கம், விளக்கச் சித்திரங்கள், விலை: ரூபா 70., அளவு: 20×14.5 சமீ.
சர்வானந்தமய பீடத்தின் “நாம் வணங்கும் தெய்வங்கள்” என்ற வெளியீட்டுத் தொடரில் வெவ்வேறு விதமான தெய்வ வடிவங்களின் உருவ அமைதிகள், வரலாற்றுச் செய்திகள், வழிபாட்டு முறைகள், தோத்திரங்கள் முதலியவற்றைத் தொகுத்து வழங்கி வந்துள்ளனர் .அவ்வகையில் மாரியம்மன், ஆஞ்சநேயர், நாராயணன், ஐயப்ப சுவாமி என்ற வரிசையில் ஐந்தாவதாக துர்க்கை அம்மன் பற்றிய இந்நூல் அமைகின்றது. இந்நூலின் முதற்பதிப்பு சாவகச்சேரி-விளைவேலி, ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான ஆதீனகர்த்தர் அமரர் பிரம்மஸ்ரீ ப.மஹாகணபதி சர்மா அவர்களின் ஞாபகார்த்தமாக 21.03.2009 இல் அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது.