8179 முருகப் பெருமானின் சிறப்பும் ஆன்மீகச் சிந்தனைகளும்.

பாக்கியரெத்தினம் ஆறுமுகம். அவுஸ்திரேலியா: பாக்கியரெத்தினம் ஆறுமுகம், 1வது பதிப்பு, 2010. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).

xx, 88 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12 சமீ.

கிழக்கிலங்கையைச் சேர்ந்த திருப்பழுகாமம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நூலாசிரியர். இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது அவுஸ்திரேலியாவைப் புகலிடமாகக் கொண்டு வாழும் இவர் ஆன்மீக ஈடுபாடும், கலை ஆர்வமும் கொண்டவர். திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வரலாறும் பணிகளும் பற்றிக் கூறவிளையும் இந்நூலில், திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயச் சிறப்பும் வரலாறும், ஆலய உடைப்பும் அருள் ஒளி வருகையும், வேலாயுத சுவாமியின் திருப்பள்ளி எழுச்சி விளக்கம், திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிமேற் பாடப்பெற்ற திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள், திருப்பழுகாமம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமிமேற் பாடப்பெற்ற திருப்பொன்னூஞ்சல், ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி பஜனைப் பாடல்கள், தற்கால நிர்வாக அமைப்பு- 2010, ஆலயத்தின் கடந்தகாலத் திருவிழாப் படங்கள், ஆலய வரலாற்றில் தலைவர்கள், உள்ளிருந்து வழிகாட்டும் பாபா (கட்டுரை) ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Uk Gambling enterprise Recommendations

Blogs Enjoyable Webpages Having A great deal To offer Online casino People And therefore British On-line casino Will pay The quickest? Video game Organization The