மலர் வெளியீட்டுக் குழு. இலண்டன் N6 5BA: பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 200A, Archway Road, London, 1வது பதிப்பு, ஒக்டோபர்; 2012. (இலண்டன்: ஜே.ஆர்.பிரின்ட்).
152 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×20.5 சமீ.
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் 14வது சைவமாநாடு 2012 ஒக்டோபர் 6-7ம் திகதிகளில் இலண்டனில் இடம்பெற்றது. அதன்போது வெளியிடப்பட்ட இந்தச் சிறப்புமலரில் தலைவருரை, ஆசியுரைகள், வாழ்த்துரைகள் என்பனவற்றுடன், பல்வேறு இந்து சமயக் கட்டுரைகளும்; இடம்பெற்றுள்ளன. இம்மாநாடு, 06.10.2012 அன்று உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்திலும் (200A Archway Road, London N6 5BA), 07.10.2012 அன்று லண்டன் லூஷியம் சிவன் கோவிலிலும் (4A Clarendon Rise, Lewisham, London SE13 5ES) இடம்பெற்றது.