ந.மயூரரூபன். வல்வெட்டித்துறை: எழினி, பழைய பொலிஸ் நிலைய வீதி, வல்வெட்டி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).
x, 57 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-54304-0-1.
வடமராட்சி கிழக்கு-அம்பனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் மயூரரூபன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தன் முதுநிலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், சமூகவியல்சார் கட்டுரைகளுடன் கவிதை, சிறுகதைகள் போன்ற ஆக்க இலக்கியங்களையும் படைத்துவருகின்றார். சமூகவியலின் பிரயோக அறிவினைக் குவிமையப்படுத்தியதாக அமையும் நூல் இது. முதுமையடைதல், இனத்துவம், மதுப்பாவனை, குற்ற நடத்தை, பெண்களுக்கெதிரான வன்முறை, தற்கொலை ஆகிய விடயங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்குகின்றன.