சி.கோணேஸ்வரன். கொழும்பு 15: சி.கோணேஸ்வரன், 357, அளுத்மாவத்தை வீதி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி)
(4), 138 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21×14 சமீ.
நூலாசிரியர் இலங்கை கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இலங்கை கூட்டுறவு முகாமை நிறுவனத்தின் முகாமை உசாத்துணைவராகப் (Management Consultant) பணியாற்றியவர். இக்கைநூல் சமூகவியலை கூட்டுறவாளர்கள் பயன்படுத்தும் வகையில் ஒழுங்கமைத்து வழங்குகின்றது. இதில் சமூகவியல் கருத்துக்களும் எண்ணங்களும், சமூகவியல் ஆய்வு முறைகள், சமூகவியற் சிந்தனை விருத்தி, நவீன குடும்ப அமைப்பும் விருத்தியும் பழக்கவழக்கங்களும், முறைசார் முறைசாராக் கல்வி, வகுப்புப் பாகுபாடுகளும் வாழ்க்கை உயர்ச்சியும், தொழில் என்பதன் பொருள், சனத்தொகை வளர்ச்சியில் சனநாயக சமூக நோக்கங்கள். சமூக அமைப்பு முறைகள், சமூகக் கட்டுப்பாட்டு முகவர்கள், குற்றமும் கடமை தவறுதலும், சமூக மாற்றத்திற்கான காரணங்கள், சமூக மாற்றங்களின் நடைமுறைகள், இலங்கைச் சமூகங்களும் கூட்டுறவு அமைப்புக்களின் ஆரம்பமும், தலைமைத்துவம், கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டங்கள், தொடர்பாடல், ஆளுமை, ஆளுமை வகைகள், கூட்டுறவுக் கல்லூரி பரீட்சைகளுக்கான மாதிரி குறும் வினா-விடைகள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43392).