ச.எரிக் கென்றிசன் (நிலான்). கொழும்பு 13: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மே 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
iv, 58 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.
யாப்புகள், தேசிய இயக்கங்கள், கட்சிகள், உள்ளுராட்சி சபைகள், அதிகாரப் பரவலாக்கம், வெளிநாட்டுக் கொள்கை ஆகிய விடயங்களை க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கும் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வினா-விடை மூலம் கற்பிக்கும் நோக்கோடு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் கோட்பாடுகள், நிறுவனங்கள் பற்றிய முதலாவது பாகம் ஏற்கெனவே ஆசிரியரால் வெளியிடப்பட்டுள்ளது. நூலாசிரியர், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் பிட்டி, முருங்கனைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றவர். பல ஆண்டுகளாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். அரசறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் கற்பிப்பதுடன் அத்துறையில் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.