8222 மலையகம் எழுகிறது: மலையக அரசியலில் சமூக கலாசார அமைப்புகள்.

வி.ரி.தர்மலிங்கம்.  United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

92 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-908076-5-4.

மலையக மக்களிடையே எழுந்துவந்த சமூக, அரசியல் மேம்பாட்டு அமைப்புக்களைப் பற்றியதொரு ஆவணம். இந்நூல் மலையகத் தமிழர்கள் இலங்கைக்குஅழைத்துவரப்பட்டு, அவர்தம் சமூகம் இலங்கையில் வேரூன்றியதிலிருந்து  தொன்னூறுகளின் ஆரம்பகட்டத்தில் மலையக மக்கள் முன்னணி உருவாகியது வரையிலான காலகட்ட வரலாற்றை விபரிக்கின்றது. அறிமுகம், மலையக சமூகம் உருவாகின்றது, இடதுசாரித் தொழிற்சங்கம் உதயம், காங்கிரசின் தோற்றம், அரசியல் உரிமை பறிப்பு, இளைஞர்களின் சிந்தனை எழுச்சி, மலையகத்தில் தி.மு.க. , இளைஞர் தமிழ்ச் சங்கம், தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டும், மலைநாடு நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலையக இளைஞர் முன்னணி, மலையக இளைஞர் பேரவை, மலையக மக்கள் இயக்கம் ஆகிய அத்தியாயங்களில் விரியும் இவ்வாய்வின் மூலம் மலையக அரசியலில் சமூக கலாச்சார அமைப்புகளின் முக்கியமான வரலாற்றுப் பங்களிப்பு வெளிப்படுத்தப்படுகின்றது. 1941இல் தலவாக்கலையில் பிறந்த நூலாசிரியர், தன் இளமைக்காலத்தில் இளைஞர் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை நிறுவி, கலை இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர். மலையகப் பாரம்பரியக் கலைகளுக்கு நவீன வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர். மலையக மக்கள் முன்னணியின் உதவித் தலைவராகப் பதவி வகித்தவர்.

ஏனைய பதிவுகள்

8160 துக்கம் துடைக்கும் துர்க்காதேவி.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 2009, 1வது பதிப்பு, மார்ச் 2009. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி