8272 கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்.

சபா ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 96 பக்கம், விலை: ரூபா 260., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-685-003-1.

நவீன கல்வி முறைமையோடு இணைந்த தொழிற்பாடாகத் தொடர் தொழில் வழிகாட்டல் அல்லது ஆற்றுப்படுத்தல் அமைந்து வருகின்றது. மனித வளத்தை உச்சநிலையிலே பயன்படுத்திக்கொள்வதற்கும் தொழில்சோர்வை நீக்கி தொழில்சார் உளநிறைவை ஏற்படுத்திக் கொடுத்தலுக்கும் வளமுள்ள வழிகாட்டல் வேண்டப்படுகின்றது. இந்நூல் அவ்வழிகாட்டல் பற்றிய அடிப்படை அறிவினை 16 தலைப்புகளில் வழங்குகின்றது. தொடர் தொழில் வழிகாட்டற் கோட்பாடுகள், தொடர் தொழில் வழிகாட்டற் சிந்தனைகள், தொடர் தொழிலோடு இசைவுறுதல், தொழிற் கல்வியில் ஒரு புதிய திருப்பம், தகவற் சமூகமும் கல்வி வழிகாட்டலும், பணியாளர்களைத் தெரிவுசெய்வதற்கு உளவியல் தேர்வுகளைப் பயன்படுத்தல், உடனிணைப்பு வழியான வழிகாட்டலும் சீர்மியமும், ஆளுமை அணுகுமுறைகள், உளப்பாங்கு, மீத்திறனுடையோருக்கு வழிகாட்டல், மாணவர் வகைப்பாடுகளும் ஆசிரியர் அணுகுமுறைகளும், நேர்காணல், மாணவர் தரவுத் திரட்டலும் வழிகாட்டலும், நுண்மதித் தேர்வும் தொடர் தொழில்தெரிவும், ஆன்மீக நுண்மதி, அரசியல் நுண்மதி ஆகிய விடயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்