வி.விமலாதித்தன், எஸ்.அருணன், நீ.நிஷாந்தன், எஸ்.நிமலபிரகாசன் (மலராசிரியர்கள்). கொழும்பு: ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றம், 1வது பதிப்பு, 2004. (கொழும்பு: அரசன் அச்சகம்).
240 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ
கொழும்பு, ரோயல் கல்லூரி தமிழ் நாடக மன்றத்தின் பல்வேறு அரங்கியல் பணிகள் பற்றிய பதிவாக மலர்ந்துள்ள இச்சிறப்புமலரில் தனிக்குடித்தனம் என்ற ஏழு காட்சிகள் கொண்ட நாடகத்தின் எழுத்துருவும், ஏகலைவன் என்று ஒரு கதை என்ற தலைப்பில் கலாபூஷணம் அராலியூர் ந.சுநதரம்பிள்ளை எழுதிய வானொலி நாடகத்தின் எழுத்துருவும், அரங்கியல் தொடர்பான சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33958).